நீங்கா நினைவுகளுடன்

அமெரிக்காவில் கிறிஸ்தவக் குடிமகனாகப்பிறந்து இந்து மதத்தின் தத்துவங்களையும், ஆழ்ந்த கருத்துக்களையும் இந்துக்களுக்கு புகட்டிய ஈழத்தின் விவேகானந்தரென்று போற்றப்படும் புகழ்பூத்த சுவாமி  தந்திரதேவா அவர்களின் சேவை எங்கள் இல்லத்தினால்  என்றும் மறக்க முடியாதது.


சுவாமியின் சமயப்பணியுடன், கூடிய சமூகப்பணிக்கு ஓர் எடுத்துக் காட்டாக சுவாமியவர்கள் எமது இல்லத்திற்கு தனது முயற்சியால்  ரூபா 3,000,000 பெறுமதியான கட்டிடம் , நீர்த்தாங்கி, கிணறு போன்றவற்றை 2004ம் ஆண்டு USAID/OTI நிறுவனத்தின் மூலம் நிர்மாணித்து தந்தார். சுவாமியின் இந்த சேவையின் முழுப்பயனை இங்குள்ள மாணவர்கள் இன்றும் அனுபவித்து வருகின்றனர். இவ்வுதவியை இல்லத்திற்கு வழங்கிய அந்த மகானின் மலர்ப்பாதங்களில் எங்கள் நன்றியுணர்வினை என்றும் சமர்ப்பணம் செய்கின்றோம்.



எங்கள் வளர்ச்சிப்பாதையில் எம்மை வழிகாட்டி நெறிப்படுத்தி மண்ணுலகை நீத்த இல்லத்தின் மூத்த நம்பிக்கையாளர்சபை உறுப்பினர்கள் என்றும் எமது சேவையில் எங்களுடன் பயணிப்பதாக உணர்கின்றோம்.