இல்லத்திலுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள்


  • அடிப்படை வசதிகள்

அடிப்படை வசதிகளான உணவு, உடை, பாதுகாப்பான தங்குமிடம் அனைத்தும் இல்லத்தினால் வழங்கப்படுகின்றது.








  • கல்வி

பாடசாலை கல்வியுடன் உயர்தரம்,சாதாரணதரம்,புலமைபரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் எல்லோரும் தனியார்கல்வி நிறுவனங்களில் பிரத்தியேக வகுப்புக்களில் இணைக்கப்பட்டுள்ளனர். ஏனைய மாணவர்களை தனித்தனியாக கவனித்து கல்வி புகட்ட பிரத்தியேக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இல்லத்தினுள் கல்வி கற்பிக்கப்படுகிறது.








  • சுகாதாரம்

மாதாந்தம் சூழற்சி முறையில் வைத்தியர்களை வரவழைத்து மாணவர்களது போசாக்கு, உடல் நிலை,தொற்றுநோய்கள் சம்பந்தமாக பரிசோதித்து மருந்துகள் வழங்ப்படுகிறது.







  • விளையாட்டு

கிரிக்கட், கரப்பந்து, Badminton, chess, கரம் போன்றவற்றிற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு ஓய்வு நேரங்களில் விளையாட்டில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.









  • பொழுது போக்கு

வானொலி கேட்டல், தொலைக்காட்சிபார்த்தல், போன்றவற்றிற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதுடன் , பத்திரிகை பார்ப்பதற்கான பிரத்தியேக வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.




  • நூலக வசதி

பாடசாலை புத்தகங்களை அடிப்படையாக கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களால் வெளியிடப்படும் பயிற்சி புத்தகங்கள், வினாவிடை புத்தகங்கள் என்பவற்றை கற்க கூடிய வகையில் பிரத்தியேக நூல்நிலையமொன்று நடாத்தப்பட்டு வருகிறது.


  • சமயம்

ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக்கல்வி மூலம் சமயக்கல்வி வழங்கப்படுகிறது. பிரத்தியேகமாக இல்லத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும்  பிராத்தனை மண்டபத்தில் காலை, மாலை பிரார்த்தனைகள் இடம்பெறுவதோடு இந்துக்களின் விசேட தினங்கள் அனைத்தும் இங்கு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.வெள்ளிக்கிழமைகளில் இவ்வில்லத்தை உருவாக்கிய ஆலயத்தில் கூட்டுபிரார்த்தனை இல்ல மாணவர்களினால் சிறப்பாக நடாத்தப்படுகிறது.




இல்லத்தின் ஊடாக வறுமையான வெளிமாணவர்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள்

இல்லமானது இல்லத்தினுள் தனது சேவையை மட்டுபடுத்திக்கொள்ளாது இல்லம் அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களின் கல்விக்கு வலுவூட்டும் முகமாக தனியாக ஓர் பிரிவினை இதற்காக உருவாக்கி செயற்பட்டு வருகிறது. இதற்காக மாணவர் கல்வி அபிவிருத்திக்கான உதவி (Student Education Development Aid-SEDA)  எனும் பிரிவு உருவாக்கப்பட்டு இதன் அடிபடையில் பின்வரும் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

  • பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு அவர்களது கல்வியாண்டிற்குரிய உதவித்தொகையாக இல்லத்தினால் இயன்ற நிதியுதவி வழங்கப்படுகிறது. அத்துடன் பல்கலைக்கழக கல்விக்குரிய புத்தகங்கள் கொள்முதல் செய்து அன்பளிப்பாகவும் வழங்கப்படுகிறது.



  • நூல்நிலைய வசதியற்ற இல்லம் அமைத்துள்ள வீரமுனை கிராமத்தில் மாணவ வள நிலையம் எனும் பெயருடன் மாணவர்கள் வசதி கருதி தற்காலிக கட்டிடத்தில் நூல்நிலையம் ஒன்றை ஆரம்பித்து மாணவர்களுக்கு தேவையான பயிற்சி புத்தகங்கள், கடந்த கால பரீட்சை வினாவிடைகள் என்பவற்றை வழங்கி  அதனை பேணி வறிய மாணவர்களது கல்வி முன்னேற்றத்துக்கு உதவி செய்யப்படுகிறது.

  • இல்லத்திலுள்ள மாணவர்களினதும் ,இல்லத்தை அண்டிய பிரதேசத்திலுள்ள மாணவர்களினதும் ஆங்கில கல்வி மேம்பாட்டிற்காக Elocution எனும் பிரத்தியேக ஆங்கில வகுப்புக்களை இல்லம் நடாத்தி வருகின்றது. 



  • வீரமுனையிலுள்ள சிறார்களுக்கு ஆரம்ப பாடசாலை நாடாத்துவதற்கு கட்டிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
 
  • இல்லத்தினை அண்மித்துள்ள பிரதேசங்களில் போர். இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க வெளிநாடுகளில் உள்ள நன்கொடையாளர்கள் இல்லத்தினுடாக தங்களது நன்கொடைகளை பொதுமக்கள் கரங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்க்கு ஓர் நம்பகத்தன்மையான நிறுவனமாக இல்லத்தினை பயன்படுத்துகின்றனர்.