இல்லத்தின் தேவைவிபரங்கள் (இல்லத்தினதும், இல்லம் அமைந்துள்ள பிரதேசத்தினதும் தேவையைகளை கருத்தில் கொண்டு இல்லத்தின் சேவையை மேலும் விரிவுபடுத்த)
01. இல்லத்தின் மாணவர் வள நிலையதினுடாக கணணி பயிற்சி நெறி, நூல்நிலைய சேவை விரிவாக்கம் இல்லத்தினை சமூகத்தோடு இணைத்து இல்லத்தில் உள்ள மாணவர்கள் தாங்கள்
தனிமைப்பட்டவர்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றா வண்ணம் அவர்களை
வழிநடத்தும் ஓர் முயற்சியாக இல்லமானது தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இந்தவகையில்
இல்ல மாணவர்களும், அதனை அண்டியுள்ள பிரதேசத்தில் உள்ள மாணவர்களும் ஒன்றாக
இணைந்து நட்புரிமையுடன் பழகி நன்மை பெறும் வகையில் மாணவர் வள நிலையமூடாக
முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கணனி கற்கைநெறி, நூல் நிலைய வசதி என்பனவற்றை விரிவு படுத்த பின்வரும் வளங்கள் அவசியமாகின்றது. 02. மாணவர் வள நிலைய மேல் தள கட்டிட பணி இந்த கட்டிடம் பூரணப்படுத்தப்படுமிடத்து குறைந்தது ஒரே தடவையில் 60வது மாணவர்களுக்கு தனது சேவையினை இல்லத்தினால் வழங்கக் கூடியதாக இருக்கும். இக்கட்டிடத்தினை பூரணப்படுத்துவதற்குரிய மதீப்பீட்டுத்தொகையானது ரூபா 800000.00 ஆக உள்ளது. இக்கட்டடத்தை பகுதி பகுதியாகவோ அல்லது முழுதாகவோ முடித்துத்தந்தால் இல்லம் தனது சேவையில் இன்னும் உயர்வு பெறுவதற்கு ஓர் பெரும் உந்து சக்தியாக இந்த உதவி அமையும் என்பது திண்ணம். 03. சுற்று மதில் திருத்தம் இல்லத்தின் சுற்று மதிலின் ஒரு பகுதியான 485" பூசப்படாமல் உடைந்த நிலையில் பழுதடைந்துள்ளது.மழை காலங்களில் இந்த மதில்கள் நீர் நிலைக்கு அண்மையில் பல நாட்கள் தொடர்ந்து மூழ்கி இருப்பதனால் இடிந்து விழக்கூடிய வகையில் மிகவும் ஆபத்தாகவுள்ளது. எனவே இதனை பூசி திருத்தம் செய்வது மிகவும் அவசியமானதொன்றாகும். இதற்கான மதிப்பீட்டு தொகை ரூபா 130,500.00 மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அன்பர்களின் கரங்களில் இருந்து எதிர்பார்க்கின்றோம். 04. மாதாந்த, வருடாந்த அன்பளிப்புக்கள்(இல்ல பராமரிப்பு செலவுகளில் ஒன்றை பொறுப்பேற்றல்) கீழ்குறிப்பிடப்படும் இல்லம் சம்பந்தமான பராமரிப்புச்செலவுகளில் ஏதாவது ஒன்றை தங்களது தர்மசேவையாக ஏற்று மாதாந்தமோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ தங்களால் இயன்ற உதவியினை வழங்கி வந்தால் எங்களது இல்லத்தினுடாக மேலும் சேவைகளை சிறப்புற நடாத்த முடியும். 05. வருடாந்த கல்விச்சுற்றுலா வருடா வருடம் பாடசாலை விடுமுறை தினங்களில் இல்ல மாணவர்களை இலங்கையில் பிரசித்தி பெற்ற இடங்களுக்கு அழைத்துச்செல்வதற்கான செலவினை வழங்கி இல்ல மாணவர்களின் மனதில் ஓர் புத்துணர்வை ஏற்படுத்த விரும்பும் அன்பர்கள் தங்களால் இயன்ற செலவுத்தொகையை வழங்கி சுற்றுலாவிற்கு உதவி புரியலாம். |