இல்லத்தின் வரலாறு


மேற்படி இல்லம் கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு - வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தினால் ஆலயமடத்தில், ஆலயத்தின் முழு நிதிச்செலவில் ஏறக்குறைய 11/4 (ஒன்றே கால்) ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வில்லமானது  தா.வினாயகமூர்த்தி (பொறியியலாளர்) தலைமையில் வீரமுனை இளைஞர்களினது ஒருமித்த அயராத இரவு பகல் பாராத சேவையினால் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 2003.02.05 அன்று அனாதரவான சிறார்களின் சரணாலயமாக திறந்து வைக்கப்பட்டது. இவ்வில்லத்தின் ஆரம்பகாலத்திலிருந்து ஏறக்குறைய ஓராண்டிற்கான முழு நாளாந்த செலவும் ஆலயத்தினாலேயே வழங்கப்பட்டுவந்தது. இதனை தொடர்ந்து 2004 முதல் முழுமையாக பொதுமக்களின் நன்கொடையில் இயங்குமளவிற்கு வளர்ச்சி பெற்றது.


குறிப்பாக வீரமுனையிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் கடந்த 1990ம்  ஆண்டு இடம்
பெற்ற கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனாதராவான, வறுமையான நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 15 மாணவர்களுடன் அவர்களது எதிர் கால கல்வி நிலை கருதி

இவ் இல்லமானது உதயமானது. இவர்களுடன் இங்கு 2004ம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட ஆதரவளிக்கப்பட வேண்டிய மேலும் பல சிறார்களும் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.      

இதேவேளை ஈழத்தின் விவேகானந்தர் என போற்றப்படும் ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா அவர்கள் இவ் இல்லதின் சேவைகளையும் , தேவையினையும் நேரில்   பார்வையிட்டு அறிந்து கொண்டதற்கமைய USAID/OTI நிறுவனத்தின் உதவியுடன் புதிதாக கட்டிடம், கிணறு, நீர்த்தாங்கி என்பவற்றை 2004 ஆண்டு நிர்மாணித்து தந்து இல்லத்தின் சேவைக்கு மேலும் வலுவூட்டினார்.

நிகழ்வுகள்

  • இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கல் - 2016/05/12 இலண்டனை சேர்ந்த திரு; ஜெயானந்தன் என்பவர் தனது மகனான காரூணியன் என்பவரின் இறந்த தினத்தை முன்னிட்டு 2016.05.12 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்குவதற்கு பண உதவி வழங்கினார் . அன்று இல்ல சிறார்களுக்கு மூன்று நேர உணவு வழங்கப்பட்டது . இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை  இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம்.
    Posted May 20, 2016, 3:00 AM by Uthayarajan Markandu
  • இல்ல சிறார்களுக்கான உணவு வழங்கல்- 2015/12/13 இலண்டனை சேர்ந்த திரு;ஆர்.எஸ். கனகராஜா என்பவர் தனது தாயான சீனிவாசகம் செல்லம்மா என்பவரின் 96 வது பிறந்த நாளை முன்னிட்டு 2015.12.13 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்கியுள்ளார். இவரும் இவரது குடும்பத்தவரும் சீரும் சிறப்பும் பெற்று  பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிர்வாகத்த ...
    Posted Dec 14, 2015, 3:08 AM by Uthayarajan Markandu
Showing posts 1 - 2 of 44. View more »

விளம்பரங்கள்

  • "வறுமையான மாணவர்களின் கல்விக்கு வலுவூட்டுவோம்" வறுமையான,அடிப்படை வசதி குறைந்த அனைத்து மாணவர்களுக்கும் இல்லத்தில்தான் தங்கியிருந்து கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படை கருத்திட்க்கு விடைகொடுக்கும் முகமாக சீர்பாத தேவி சிறுவர் இல்லமானது வறுமையான மாணவர்களின் கல்விக்காய் உதவி புரிய உதவிக்காக ஏங்கி நிற்கும் மாணவர்களது வாசட்கதவுகளை தட்டி அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ...
    Posted Nov 15, 2011, 7:22 AM by Uthayarajan Markandu
Showing posts 1 - 1 of 1. View more »

You must be logged in to add gadgets that are only visible to you