நிதி, பொருள் உதவி வழங்க
உணவு வழங்கதங்களுக்கு பொருத்தமான தினங்களில் ( பிறந்ததினம்,திருமணநாள்,திதி) இல்லமாணவர்களுக்கு உணவு வழங்க குறித்த திகதியை தேர்ந்தெடுத்து ,வருடாவருடம் அந்ததிகதியிலோ அல்லது தாங்கள் விரும்பும் திகதியிலோ இல்ல மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு பணத்தினை வழங்கலாம் அல்லது தாங்கள் வந்து இல்லச்சிறார்களுக்கு தங்களது கரங்களால் இல்லத்தில் சமைத்து உணவு பரிமாறி மாணவர்களது மனங்களில் புன்னகை பூக்கச்செய்யலாம்.
பொருள் உதவி வழங்கமாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், பண்டிகைக்குரிய புத்தாடைகள், பாதணிகள் போன்ற தேவையான பொருட்களை அன்பளிப்பாக தந்துதவலாம்.
நிதி வழங்கஇல்லத்திற்கு வருகை தந்தோ அல்லது வங்கி மூலமாகவோ தாங்கள் தர்மசேவையாக நிதி உதவியினை வழங்கி இல்ல சேவையினை வலுப்படுத்தலாம்.
வங்கி மூலம் உதவி புரிய கணக்கிலக்கம் :- 064100140000507 மக்கள் வங்கி சம்மாந்துறை, இலங்கை |
|