வீரமுனை குருசுவாமி ஐயர் அறநெறிப் பாடசாலையினால் நடாத்தப்பட்ட திருவள்ளுவர் குருபூசை தினம்

posted Mar 13, 2015, 2:10 AM by Uthayarajan Markandu
 
திருக்குறள் மூலம் வாழ்வின் இரகசியங்களை எமக்கு தந்த திருவள்ளுவரின் குரு பூசை தினம் இன்றாகும். இதனையொட்டி இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வீரமுனை குருசுவாமி ஐயர் அறநெறிப் பாடசாலையினால் நடாத்தப்பட்ட திருவள்ளுவர் குருபூசை தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.03.2015) காலை 8.00 மணிக்கு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திரு.தா.விநாயகமூர்த்தி (பொறியிலாளர்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச இந்துக்கலாசார உத்தியோகத்தர் திருமதி.சிவலோஜினி, திரு.s.சிவசுந்தரமூர்த்தி (அறநெறி பாடசாலை ஆலோசகர்-ISA), அறநெறி அதிபர் ஆசிரிய மாணவர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்கள், நிருவாகசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து அறநெறி மாணவிகளினால் இறைவணக்கமும் அறநெறி கீதமும் இடம்பெற்றதுடன் சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்களினால் பஜனை மற்றும் திருவள்ளுவர் திருவடி பூசை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திரு.தா.விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையுரையும், அறநெறி மாணவ மாணவிகளின் பேச்சு, திருக்குறள் மனனம் இடம்பெற்றதுடன் அறநெறி பாடசாலை ஆலோசகர் s.சிவசுந்தரமூர்த்தி அவர்களின் சிறப்புரை, குருசுவாமி ஐயர் அறநெறிப் பாடசாலை அதிபர் திருமதி. க.கஜேந்தினி அவர்களின் நன்றியுரை இடம்பெற்றதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தது.
Comments