ஞானம் அறக்கட்டளை நிதியத்தினால் சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களுக்கு உதவி

posted Mar 2, 2015, 4:24 AM by Thambiaiyah Sathiyaraj   [ updated Mar 2, 2015, 4:24 AM ]
ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகரும், லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களின் 43 ஆவது பிறந்ததினமான இன்று(2) திங்கட்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது. இதனையொட்டி வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களுக்கு மதிய உணவுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு மாதாந்தம் ஆயிரம் ரூபாய் நிதி கல்வி ஊக்குவிப்புக்காக வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது.