இல்லச் சிறார்களது வருடாந்த கல்விச் சுற்றுலா

posted Feb 9, 2015, 7:12 PM by Thambiaiyah Sathiyaraj   [ updated Feb 9, 2015, 7:13 PM ]
வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களது வருடாந்த கல்விச் சுற்றுலா கடந்த 18/01/2015 அன்று இனிதே நடைபெற்றது. இந்த மகிழ்ச்சிகரமான சுற்றுலாவில் இல்லச்சிறார்கள், பகுதிநேர ஆசிரியர்கள், நிருவாக உறுப்பினர்கள், இல்லப்பாதுகாவலர் போன்றோர் பங்கேற்றனர். மேலும் மாணவர்களது போஷாக்கினை பேணும் பொருட்டு இந்த சுற்றுலாவின்போது போஷாக்கான மாமிச உணவுகள் மிகவும் ருசியான வகையில் சமைத்து வழங்கப்பட்டது.