சீர்பாததேவி சிறுவர் இல்லத்திற்கான இணையத்தள அங்குராட்பன வைபவம்

posted Jun 17, 2011, 9:56 AM by Thambiaiyah Sathiyaraj   [ updated Jun 19, 2011, 1:05 AM by Uthayarajan Markandu ]
இன்று (17/06/2011) சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் சிறுவர் இல்லத்திற்கான இணையத்தள அங்குராட்பன வைபவம் பி.ப. 3.30 மணியளவில் இல்லத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் தா.விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.



இவ் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் கௌரவ இசான் விஜேதிலக அவர்கள் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு எமது இல்லத்தின் இணையத்தளமான www.schveeramunai.org எனும் இணையத்தளத்தினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் அவர்களும் அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் தலைவர் திரு.கைலாயபிள்ளை ஐயா அவர்களும் கல்முனை நால்வர் கோட்ட சிறுவர் இல்லத்தின் பணிப்பாளர் திரு பரதன் கந்தசாமி அவர்களும் திரு. நாகராஜா அவர்களும் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கிராம சேவைகள் நிர்வாக உத்தியோகத்தர் திரு. கே. பொன்னம்பலம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இன் நிகழ்வின் போது இல்லத்தின் SEDA திட்டத்தின் கீழ் நாவிதன்வெளியை சேர்ந்த ஒரு வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் பிலிப் ஜேனுதாஸ், தரம் -10, பாடசாலைக்கு சென்றுவருவதற்காக இல்லத்தினால் துவிச்சக்கரவண்டி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேலும் இல்லத்தினால் நடாத்தப்படுகின்ற Elocution வகுப்பில் கடந்த ஆண்டு 100 புள்ளியைப் பெற்ற வீரமுனையைச் சேர்ந்த மாணவி காளிக்குட்டி திக்சிகா விற்கு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.