போஷாக்கு உணவு வழங்கும் திட்டம்

posted Aug 28, 2011, 6:58 AM by Thambiaiyah Sathiyaraj   [ updated Aug 29, 2011, 11:54 PM by Uthayarajan Markandu ]
மேற்படி இல்லத்தில் 2011.08.28 இன்று காலை 10.15 மணிக்கு கல்முனை நகர் Lions கழகத்தினரின் நிதி உதவியுடன் இல்ல சிறார்களுக்காக போஷாக்கு உணவு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இன் நிகழ்வானது இல்லத்தின் உப தலைவர் எஸ். மகேஸ்வரன் தலைமையில் இல்லத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை Lions கழக தலைவரும் வீரமுனையின் மூத்த சமூக சேவையாளருமாகிய மதிப்புக்குரிய திரு; கே. பொன்னம்பலம் (கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர்- நாவிதன்வெளி) தலைமையிலான Lions கழக குழாமினர் கலந்துகொண்டனர். 

இன் நிகழ்வில் உரையாற்றிய இல்ல உப தலைவர் எங்கள் ஊரின் மூத்த சமூக சேவையாளர் கல்முனை நகர் Lions கழகத்தின் தலைவர் பதவியில் இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது என்று மகிழ்ச்சி கொண்டதுடன் Lions கழகமானது தனது பணியினை இன்று இந்த இல்லத்திற்கு புதிதாக தனது பணியினை ஆரம்பிக்கவில்லை. இது இல்லம் ஆரம்பிக்கபட்ட 2003 ம் ஆண்டு தொடக்கம் இல்லத்தின் தேவைகள் ஒவ்வொன்றையும் மிகவும் நுணுக்கமாக அவதானித்து தன்னாலான சேவையை வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த சத்து உணவு திட்டத்தில் மாணவர்களது போஷாக்கை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தினம் தோறும் பசுப்பால் வழங்குவதற்கான நிதியினை Lions Club முன்வந்தது அதன் சேவைக்கு ஓர் மகுடமாகும் என்றார். 



இங்கு உரையாற்றிய Lions Club தலைவர் இவ்வாறான தங்களால் முடிந்த இன்னும் பல சேவைகளை எதிர் காலத்திலும் இந்த இல்லத்திற்கு வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார், மேலும் அவர் உரையாற்றுகையில் இந்த இல்லமானது குறுகிய காலத்தில் தனது சேவையில் வளர்ச்சி பெற்ற ஓர் இல்லமாகும். இந்த இல்லத்தின் சேவைக்கான தேவைகளை தங்களால் முடிந்த வரை வழங்குவதற்கு தங்கள் Club உம், உறுப்பினர்களும் உறுதியளித்துள்ளனர் என்று குறிப்பிட்டார். 







தொடர்ந்து செயலாளர் கே. ரவி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.