நிகழ்வுகள்
இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கல் - 2016/05/12
இலண்டனை சேர்ந்த திரு; ஜெயானந்தன் என்பவர் தனது மகனான காரூணியன் என்பவரின் இறந்த தினத்தை முன்னிட்டு 2016.05.12 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்குவதற்கு பண உதவி வழங்கினார் . அன்று இல்ல சிறார்களுக்கு மூன்று நேர உணவு வழங்கப்பட்டது . இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம். |
இல்ல சிறார்களுக்கான உணவு வழங்கல்- 2015/12/13
இலண்டனை சேர்ந்த திரு;ஆர்.எஸ். கனகராஜா என்பவர் தனது தாயான சீனிவாசகம் செல்லம்மா என்பவரின் 96 வது பிறந்த நாளை முன்னிட்டு 2015.12.13 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்கியுள்ளார். இவரும் இவரது குடும்பத்தவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம். |
இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கல் - 2015/07/10
இலண்டனை சேர்ந்த திரு;ஆர்.எஸ். கனகராஜாஎன்பவர் தனது 66 வது பிறந்த நாளை முன்னிட்டு 2015.07.10 அன்று இல்லச் சிறார்களுக்கு மூன்று நேர உணவினை வழங்கினார். இவரும் இவரது குடும்பத்தவரும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிர்வாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம். |
வீரமுனை குருசுவாமி ஐயர் அறநெறிப் பாடசாலையினால் நடாத்தப்பட்ட திருவள்ளுவர் குருபூசை தினம்
திருக்குறள் மூலம் வாழ்வின் இரகசியங்களை எமக்கு தந்த திருவள்ளுவரின் குரு பூசை தினம் இன்றாகும். இதனையொட்டி இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வீரமுனை குருசுவாமி ஐயர் அறநெறிப் பாடசாலையினால் நடாத்தப்பட்ட திருவள்ளுவர் குருபூசை தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.03.2015) காலை 8.00 மணிக்கு வீரமுனை சீர்பாததேவி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது. |
ஞானம் அறக்கட்டளை நிதியத்தினால் சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களுக்கு உதவி
ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகரும், லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களின் 43 ஆவது பிறந்ததினமான இன்று(2) திங்கட்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது. இதனையொட்டி வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களுக்கு மதிய உணவுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு மாதாந்தம் ஆயிரம் ரூபாய் நிதி கல்வி ஊக்குவிப்புக்காக வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது. |
இல்லச் சிறார்களது வருடாந்த கல்விச் சுற்றுலா
வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லச் சிறார்களது வருடாந்த கல்விச் சுற்றுலா கடந்த 18/01/2015 அன்று இனிதே நடைபெற்றது. இந்த மகிழ்ச்சிகரமான சுற்றுலாவில் இல்லச்சிறார்கள், பகுதிநேர ஆசிரியர்கள், நிருவாக உறுப்பினர்கள், இல்லப்பாதுகாவலர் போன்றோர் பங்கேற்றனர். மேலும் மாணவர்களது போஷாக்கினை பேணும் பொருட்டு இந்த சுற்றுலாவின்போது போஷாக்கான மாமிச உணவுகள் மிகவும் ருசியான வகையில் சமைத்து வழங்கப்பட்டது. |
இல்ல சிறார்களுக்கு மூன்றுநேர உணவு வழங்கியது- 2014.12.13
இலண்டனில் வசிக்கும் திரு.ஆர்.எஸ். கனகராஜா என்பவர் தனது தயான சீனிவாசகம் செல்லம்மாவின் 95 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 2014/12/13 ம் திகதி இன்று இல்ல சிறார்களுக்கு மூன்று நேர உணவு வழங்கினார் . இவரின் தாயார் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாரை இல்ல சிறார்களும் நிருவாகத்தினரும் பிரார்த்திக்கின்றோம். |
1-10 of 44