இல்லத்தின் வரலாறு
மேற்படி இல்லம் கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு - வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தினால் ஆலயமடத்தில், ஆலயத்தின் முழு நிதிச்செலவில் ஏறக்குறைய 11/4 (ஒன்றே கால்) ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வில்லமானது தா.வினாயகமூர்த்தி (பொறியியலாளர்) தலைமையில் வீரமுனை இளைஞர்களினது ஒருமித்த அயராத இரவு பகல் பாராத சேவையினால் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 2003.02.05 அன்று அனாதரவான சிறார்களின் சரணாலயமாக திறந்து வைக்கப்பட்டது. இவ்வில்லத்தின் ஆரம்பகாலத்திலிருந்து ஏறக்குறைய ஓராண்டிற்கான முழு நாளாந்த செலவும் ஆலயத்தினாலேயே வழங்கப்பட்டுவந்தது. இதனை தொடர்ந்து 2004 முதல் முழுமையாக பொதுமக்களின் நன்கொடையில் இயங்குமளவிற்கு வளர்ச்சி பெற்றது.
குறிப்பாக வீரமுனையிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் கடந்த 1990ம் ஆண்டு இடம் பெற்ற கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனாதராவான, வறுமையான நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 15 மாணவர்களுடன் அவர்களது எதிர் கால கல்வி நிலை கருதி இவ் இல்லமானது உதயமானது. இவர்களுடன் இங்கு 2004ம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட ஆதரவளிக்கப்பட வேண்டிய மேலும் பல சிறார்களும் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈழத்தின் விவேகானந்தர் என போற்றப்படும் ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா அவர்கள் இவ் இல்லதின் சேவைகளையும் , தேவையினையும் நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டதற்கமைய USAID/OTI நிறுவனத்தின் உதவியுடன் புதிதாக கட்டிடம், கிணறு, நீர்த்தாங்கி என்பவற்றை 2004 ஆண்டு நிர்மாணித்து தந்து இல்லத்தின் சேவைக்கு மேலும் வலுவூட்டினார்.